கூட்டுறவு வங்கியில் தங்க முலாம் பூசப்பட்ட கவரிங் நகைகளை வைத்து 1 கோடியே 40 லட்சம் ரூபாய் மோசடி.!

0 19145

பரமக்குடி அருகே கூட்டுறவு வங்கியில் தங்க முலாம் பூசப்பட்ட கவரிங் நகைகளை வைத்து சுமார் ஒரு கோடியே 40லட்சம் ரூபாய் கடன் பெற்று மோசடி நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்குட்பட்ட நகைக் கடன் தள்ளுபடிக்கு தகுதியான பயனாளிகளை கண்டறிய உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், கிளியூரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது, தங்க முலாம் பூசப்பட்ட கவரிங் நகைகளை வைத்து சுமார் ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொடிக்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும் ஆய்வு மேற்கொண்டு வரும் அதிகாரிகள், மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments