சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மழைநீர் தேங்கிய 540 இடங்களில் 355 இடங்கள் தண்ணீர் முழுவதும் அகற்றம்

0 2059

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கிய 540 இடங்களில் 355 இடங்களில் முழுவதும் தண்ணீர் அகற்றப்பட்டுவிட்டதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மேலும், கனமழை காரணமாக சென்னையிலுள்ள 22 சுரங்கப் பாதைகளிலும் தண்ணீர் குளம் போல் தேங்கியிருந்த நிலையில், அதில் 19 சுரங்கப் பாதைகளில் மழைநீர் முழுவதுமாக அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, தியாகராய நகர் மேட்லி சுரங்கப்பாதை, வியாசர்பாடி சுரங்கப்பாதைகளில் உள்ள மழைநீர் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கனமழை காரணமாக முறிந்து விழுந்த 546 மரங்களும் அகற்றப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments