பள்ளி மாணவர்களுக்கும் இணையவழிக் கல்வி கோரி வழக்கு... ஊரடங்கிற்கு பின் பள்ளி செல்ல மாணவர்களுக்கு ஆர்வம் குறைவு - நீதிபதிகள்

0 2323

கொரோனா ஊரடங்கிற்கு பின் பள்ளிக்கு செல்ல மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைவாக இருப்பதாக தெரிவித்த உயர்நீதிமன்றம், மாணவர்களின் கல்வி சம்பந்தமாக வேறு பிரச்சனைகள் உள்ளதா என்பது குறித்து அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

கிராமப்புற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இணையவழிக் கல்வி கோரி வழக்கு தொடரப்பட்டது. இதன் விசாரணையின்போது, வேலை இழப்பால் சொந்த ஊர் திரும்பியோரின் குழந்தைகள் படித்து வந்த அரசு பள்ளிகளில் மாற்றுச் சான்று பெறுவதில் சிக்கல் உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, மாணவர்களின் பிரச்சனைகள் தொடர்பாக அரசின் ஆலோசனைகளை கேட்டு தெரிவிக்க தலைமை வழக்கறிஞர் அவகாசம் கோரியதை ஏற்ற நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments