சிகரெட்டுக்கு சில்லறை இல்லை என மறுத்ததால் பெட்டிக்கடைக்கு தீவைத்த போதை ஆசாமியின் சிசிடிவி காட்சி.!

0 2489

திருப்பூரில் சிகரெட் வாங்கவந்த போதை ஆசாமியிடம் சில்லறை இல்லை என தெரிவித்த கடைக்காரர் சிகரெட் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த போதை ஆசாமி பெட்டிக்கடைக்கு தீவைத்துள்ளார்.

டாஸ்மாக் அருகிலுள்ள பெட்டிக்கடையில் நேற்றிரவு 500ரூபாய் நோட்டை கொடுத்து சிகரெட் கேட்டதற்கு சில்லறை இல்லை என மறுப்பு தெரிவித்த பெட்டிக்கடைக்காரரிடம் 500 ரூபாய்க்கும் சிகரெட் கொடு என்று வாக்குவாதத்தில் இறங்கினார் போதை ஆசாமி.

கடையை மூடிவிட்டு போதை ஆசாமியை பெட்டிக்கடைக்காரரான செந்தில்குமார் அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளார். ஆனால், ஆத்திரம் தணியாத போதை ஆசாமி செந்தில் போனபின் தனது வாகனத்தின் பெட்ரோலை கொண்டு மூடியிருந்த ஷட்டரில் தீயை பற்றவைத்து விட்டே அங்கிருந்து சாவகாசமாக தப்பியுள்ளார்.

பற்றி எரியும் ஷட்டரை கண்ட அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி அணைத்துள்ளனர். இதனால் பொருட்சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.போதை ஆசாமி தீவைக்கும் சிசிடிவி காட்சியானது தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது. ஆனால் இதுகுறித்து கடைக்காரர் செந்தில்குமார் காவல்துறையிடம் புகார் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments