ஆந்திராவில் சொர்ணமுகி நதியில் வெள்ளப்பெருக்கு... கைக்குழந்தையுடன் சிக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மீட்பு

0 1945

ஆந்திராவில் சொர்ணமுகி நதி வெள்ளத்தில் சிக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை போலீசார் பத்திரமாக மீட்டனர்.

திருப்பதி சித்தூர் அடுத்த சந்திரகிரி பகுதியில், நதி கரையோரம் ராஜசேகர் என்பவர் மனைவி ஒரு வயது கைக்குழந்தையுடன் குடிசை கட்டி வசித்து வருகிறார். தொடர் கனமழை காரணமாக ஏரி,குளம்,ஆறு அனைத்தும்  நிரம்பிய நிலையில், சொர்ணமுகி நதியிலும் அதீத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதில் கரையோரம் உள்ள ராஜசேகர் குடிசையும் வெள்ளநீர் சூழ்ந்து கொண்டது. தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, அவர்கள் உள்ள கரையில் இருந்து கயிறு கட்டி  ஆற்றின் மறு கரைக்கு, பல மணி நேரம் போராடி  பத்திரமாக மீட்டு கொண்டு வந்தனர். போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments