டெல்லியில் காற்று மாசுபாடு தீவிரமான பிரச்சனை... 3 நாளில் நிலைமை சீராக நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

0 1860

டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் 2 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தலாமா? என மத்திய அரசிற்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின்போது, காற்று மாசை தீவிரமான பிரச்சனை என குறிப்பிட்ட நீதிமன்றம், வீடுகளுக்குள்ளும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டிய நிலை உள்ளதாக வேதனை தெரிவித்தது.

மேலும், தற்போது மோசமான நிலையிலுள்ள காற்று மாசுபாட்டின் அளவு அடுத்த 2 அல்லது 3 நாட்களில் மேலும் மோசமாக வாய்ப்புள்ளதாக தெரிவித்த நீதிமன்றம், 3 நாட்களுக்குள் நிலைமை சீராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியது.

இதனையடுத்து, வைக்கோல்களை எரிப்பது தொடர்பாக சந்தையில் இயந்திரங்கள் உள்ள நிலையில், அதனை வாங்க இயலாத விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் ஏன் வழங்கக்கூடாது என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், மாசுபாட்டிற்கு விவசாயிகளை மட்டுமே குற்றம்சுமத்தமுடியாது என கருத்து தெரிவித்துள்ளது.

இந்நிலையில், காற்று மாசை குறைப்பது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கை பற்றி மத்திய அரசு திங்கட்கிழமை நீதிமன்றத்தில் தெரிவிக்க உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments