உடைந்த மேட்டூர் அணையின் மண் கரை... நீரேற்று நிலையத்துக்குள் புகும் தண்ணீரால் மக்கள் அச்சம்..!

0 4460

சேலம் மாவட்டம் திப்பம்பட்டியில் மேட்டூர் அணை உபரி நீர்த் திட்டத்துக்கான மண் கரை உடைந்து நீரேற்று நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்ததால் ஊர்மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

525 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேட்டூர் அணை உபரி நீரை சேலம் மாவட்டத்தில் 100 ஏரிகளில் நிரப்பும் திட்டம் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. இதற்காகத் திப்பம்பட்டியில் மேட்டூர் நீர்த்தேக்கத்துக்கு இயற்கை அரணாக இருந்த சில குன்றுகளை வெட்டி எடுத்துவிட்டு மண்கரை அமைக்கப்பட்டது.

அணையின் நீர்மட்டம் 5 நாட்களாக 119 அடியாக நீடிக்கும் நிலையில் மண்கரை நனைந்து சரிந்து உடைந்து வெளியேறிய நீர் நீரேற்று நிலையத்துக்குள் புகுந்தது.

அணையின் நீர்மட்டம் மேலும் உயரும்போது அருகில் உள்ள ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்து விடும் எனப் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். உடைந்த கரையை அடைத்து வலுப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments