கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ் ; போராடி மீட்ட பொதுமக்கள்

0 2304
கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மேல்சிகிச்சைக்காக நோயாளிகளை அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பள்ளத்தில் சிக்கிக் கொண்ட நிலையில், பொதுமக்களே ஒன்று சேர்ந்து ஆம்புலன்ஸை மீட்டனர்.

செங்கத்திலிருந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு 2 நோயாளிகளை அழைத்துக் கொண்டு ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தது. தானகவுண்டன் புதூர் அருகே ஆம்புலன்ஸ் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தண்ணீர் தேங்கியிருந்த சாலையோர பள்ளத்தில் சிக்கியது.

இதனையறிந்து அப்பகுதி மக்களே ஒன்று சேர்ந்து, ஜே.சி.பி. இயந்திரத்தை வரவழைத்து, கயிறு கட்டி ஆம்புலன்ஸை மீட்டனர். அதிலிருந்த 2 நோயாளிகளையும் வேறு ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆம்புலன்சில் நோயாளிகளை அழைத்துக் கொண்டு வேகமாக செல்லும் போது, மழையால் சாலை ஈரமாக இருந்ததால், சறுக்கி கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் இறங்கியதாக கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments