வருகிற 15-ம் தேதி அமெரிக்க அதிபர் பைடன்- சீன அதிபர் ஜின்பிங் சந்திக்க உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவிப்பு

0 1923

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வருகிற 15-ம் தேதி சந்திக்க உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

காணொலி வழியாக இந்த சந்திப்பு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது இரு தரப்பு உறவுகள் மேம்படுத்துவது, சர்வதேச அளவிலான பிரச்னைகள் உள்ளிட்டவை குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் இரு பெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா அதிபர்களின் இந்த சந்திப்பு சர்வதேச அளவில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments