பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற ரவுடி மீது போலீசார் துப்பாக்கிச் சூடு

0 4555
பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற ரவுடி மீது துப்பாக்கிச் சூடு

மதுரையில் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற ரவுடி மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி கைது செய்தனர். அண்ணாநகர் பகுதியில் உள்ள செண்பகத்தோட்டம் மீனவ சங்க கட்டிடம் அருகே பெண் ஒருவரை அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி குருவி விஜய், பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான்.

அந்தப் பெண்ணின் அலறல் சப்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். நிகழ்விடத்திற்கு வந்த போலீசார் மீது ரவுடி குருவி விஜயும், அவனது நண்பர்களும் தாக்குதல் நடத்த முயன்றனர்.

இதையடுத்து போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் குருவி விஜய்க்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அவனையும், நண்பர்களையும் போலீசார் கைது செய்தனர். காயமடைந்த ரவுடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments