ஐதராபாத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு நூதன முறையில் கடத்த முயன்ற போதை பொருட்கள் பறிமுதல்

0 2146
ஐதராபாத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு நூதன முறையில் கடத்த முயன்ற போதை பொருட்கள் பறிமுதல்

ஐதராபாத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு நூதன முறையில் கடத்த முயன்ற 5 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கொரியர் மூலம் ஐதராபாத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு போதைப்பொருள் கடத்தப்படுவது தொடர்பான ரகசிய தகவல் போலீசாருக்கு கிடைத்தது.

இதனை அடுத்து ஐதராபாத் போலீசார், வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஆகியோர் பேகம் பேட்டை சர்வதேச விமான நிலையத்தில் உள்ள இன்டர்நேஷனல் கொரியர் அலுவலகத்தை சோதனை செய்தனர்.

அப்போது போட்டோ பிரேம்களுக்கு இடையே எபிட்றின் என்று கூறப்படும் 16 கிலோ போதை பொருளை மறைத்து கடத்த முயன்றது தெரிய வந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments