டெல்டா மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு

0 1735
டெல்டா மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் ஆய்வு

கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 5 மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்கிறார்.

கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் பயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை கடலூர் மாவட்டம் அரங்கமங்கலம், அடூர் அகரம் பகுதிகளை முதலமைச்சர் நேரில் பார்வையிடுகிறார். அங்கிருந்து மயிலாடுதுறை மாவட்டம் இருக்கூர், தரங்கம்பாடி பகுதிகளுக்குச் சென்று மழை பாதிப்புகளை ஆய்வு செய்கிறார்.

பின்னர் நாகப்பட்டினம் மாவட்டம் கருங்கனி, அருந்தவபுலம் பகுதிகளிலும், திருவாரூர் மாவட்டம் ராயநல்லூர், புழுதிக்குடி பகுதிகளிலும் ஆய்வு செய்யும் முதலமைச்சர் ஸ்டாலின், பிற்பகலில் தஞ்சாவூர் மாவட்டம் பெரியக்கோட்டை பகுதியிலும் பார்வையிட்டு சேத விவரங்களை நேரில் ஆய்வு செய்ய உள்ளார். இதற்காக அவர் நேற்று மாலை புதுச்சேரி சென்றடைந்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments