பல பெண்களை ஏமாற்றி உல்லாசமாக சுற்றிய வாலிபர்... மாலையும் கழுத்துமாக போலீசில் நேக்காக ஒப்படைத்த பாதிக்கப்பட்ட பெண்

0 5789

கும்பகோணத்தில் பல பெண்களைக் காதல் வலையில் வீழ்த்தி ஏமாற்றிய நபரை பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் சமயோசிதமாக திருமணம் செய்துகொண்டு, மாலையும் கழுத்துமாகச் சென்று அவனை மகளிர் போலீசில் ஒப்படைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நாகேஸ்வரன் வடக்கு வீதியை சேர்ந்த அந்தப் பெண், பெற்றோரை இழந்து உறவினர் வீட்டில் தங்கி, கூலி வேலைக்குச் சென்று வந்துள்ளார். அங்கு தியாகராஜன் என்ற இளைஞனுடன் காதல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், தியாகராஜனின் செல்போனை எதேச்சையாக ஆராய்ந்த அந்தப் பெண், அதில் அவன் பல பெண்களுடன் நெருக்கமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

அதுகுறித்து கேட்டபோது மழுப்பிய தியாகராஜன், அவரிடமிருந்து விலக முயன்றுள்ளான். இதுகுறித்து பெண்ணின் உறவினருக்குத் தெரியவந்து, அவனை மடக்கிப் பிடித்து, அங்குள்ள மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

திருமணம் செய்த கையோடு, மாலையும் கழுத்துமாக தியாகராஜனை மகளிர் காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசில் ஒப்படைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments