மழைநீர் தேங்கி இருப்பதால் சென்னையில் 5 சுரங்கப்பாதைகளுக்கு போக்குவரத்து தடை! 

0 2315

சென்னையில் மழைநீர் பெருக்கு காரணமாக வியாசர்பாடி, கணேசபுரம்,   மேட்லி, துரைசாமி மற்றும் காக்கன் ஆகிய 5 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

மழை நீர் தேங்கி இருப்பதால் கேகேநகர் ராஜமன்னார் சாலை, மயிலாப்பூர் டாக்டர் சிவசாமி சாலை, செம்பியம் ஜவஹர்நகர், பெரவள்ளூர் 70 அடி சாலை, புளியந்தோப்பு டாக்டர் அம்பேத்கர் சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, பட்டாளம் மணி கூண்டு, வியாசர்பாடி முல்லை நகர் பாலம், சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து தலைமைச் செயலகம் செல்லும் வழி, பெரும்பாக்கம் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

வடபழனி முதல் கோயம்பேடு செல்லும் 100 அடி சாலையில் இலகுரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை.  மயிலாப்பூர் ஆர்கே மடம் சாலை, திருமலைப் பிள்ளை ரோட்டில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து மாற்றப்பட்டு வாகனங்கள் திருப்பி விடப்படுகின்றன...

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments