புதுச்சேரியில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், மீனவர்களுக்கு நிவாரணம் - முதலமைச்சர் ரங்கசாமி

0 1886

புதுச்சேரியில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், மீனவர்கள் மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமி நிவாரணம் அறிவித்துள்ளார். 

சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஆயிரம் ஹெக்டேர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் 25 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் கூறினார்.

சேதமடைந்த வீடுகளுக்குத் தலா 25 ஆயிரம் ரூபாயும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.

கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் மீனவர்களின் குடும்ப அட்டைக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் எனத் தெரிவித்த அவர், கால்நடை உயிரிழப்புகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி மாடுகளுக்கு ரூபாய் 10 ஆயிரமும் ஆடுகளுக்கு 5 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் எனக் கூறினார். 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments