அரசு பேருந்துகளில் செல்போனில் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்கவோ, வீடியோ பார்க்கவோ கூடாது - கர்நாடகா அரசு

0 3525

கர்நாடகாவில் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் பிறருக்கு தொந்தரவு தரும் வகையில் வெளியில் சத்தம் வைத்து செல்போனில் பாட்டு கேட்கவோ, வீடியோ பார்க்கவோ கூடாது என அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள், பேருந்துக்குள் அதிக சத்தத்துடன் பிறருக்கு தொந்தரவு தரும் வகையில் செல்போனில் வீடியோ அல்லது பாட்டு கேட்க தடை விதிக்கப்படுவதாகவும், பயணிகளுக்கு இதுதொடர்பான அறிவுறுத்தலை ஓட்டுநர், நடத்துநர்கள் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

நீதிமன்ற உத்தரவை பின்பற்றத் தவறும் பயணிகளை பேருந்தில் இருந்து பாதியிலேயே இறக்கிவிடலாம் எனவும் போக்குவரத்து ஊழியர்களுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments