கோவையில் தனியார் பள்ளி ஆசிரியரின் தொடர் பாலியல் அத்துமீறலால் 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை -ஆசிரியருக்கு போலீஸ் வலைவீச்சு

0 6226

கோவையில் தனியார் பள்ளி ஆசிரியரின் தொடர் பாலியல் அத்துமீறலால் 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த அந்த மாணவி, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சின்மயா பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். அண்மையில் காரணம் எதுவும் சொல்லாமல், அந்தப் பள்ளியில் இருந்து மாற்றுச் சான்றிதழ் பெற்று வேறு பள்ளியில் சென்று சேர்ந்த மாணவி, வியாழக்கிழமை மாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் என்று கூறப்படுகிறது.

தற்கொலைக்கு முன்பு, தனது நண்பனிடம் அழுதுகொண்டே அவர் பேசியிருக்கிறார். சின்மயா பள்ளியில் இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றி வந்த மிதுன் சக்ரவர்த்தி என்பவன் மாணவியிடம் அடிக்கடி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்தான் என்றும் அதுகுறித்து பள்ளித் தரப்பில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டப்படுகிறது. அதனடிப்படையில் மிதுன் சக்ரவர்த்தி மீது தற்கொலைக்குத் தூண்டுதல், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸார் தேடி வருகின்றனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments