அரங்கநாதன் சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த மழை நீரில் சிக்கிக்கொண்ட மாநகரப் பேருந்து...

0 2597

சென்னை போரூரில் இருந்து தியாகராய நகர் வழியாக மந்தைவெளி நோக்கி வந்த மாநகரப் பேருந்து சைதாப்பேட்டை தியாகி அரங்கநாதன் சுரங்கபாதையில் தேங்கியிருந்த மழை நீரில் சிக்கியது.

அரங்கநாதன் சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கியதால் தடுப்புகள் மூலம் அடைக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இந்நிலையில், 12 M என்ற மாநகர பேருந்தின் ஓட்டுநர் கவனக்குறைவால் சுரங்கபாதைக்குள் பேருந்தை இயக்கியதால், தண்ணீரில் பேருந்து சிக்கிக்கொண்டது.

தகவலறிந்து வந்து தீயணைப்புத்துறையினர், பேருந்துக்குள் இருந்த அனைவரையும் பத்திரமாக மீட்டதோடு, ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின் பேருந்தையும் மீட்டனர்.

அதேப்போல், சென்னை தியாகராய நகர் பசுல்லா சாலையில் முழங்கால் அளவுக்கு தேங்கி நிற்கும் மழை நீரை ராட்சத மோட்டார் மூலம் அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments