இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 23 பேருக்கு சிறைக்காவலை நீட்டித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு!

0 2602

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 23 பேருக்கு சிறைக்காவலை நீட்டித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டயைச் சேர்ந்த அந்த 23 மீனவர்களும் கடந்த மாதம் 11ஆம் தேதி இலங்கை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டனர்.

இலங்கை பருத்தித்துறை நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வெளிநாட்டு மீன்பிடி தடை சட்டத்தின் கீழ் படகு ஒன்றுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம் என நீதிபதி கிஷாந்தன் தெரிவித்தார்.

அதற்கு மீனவர்கள் தரப்பு வழக்கறிஞர் ஜெயில் மஹில் மகாதேவ் எதிர்ப்பு தெரிவித்ததால், மீனவர்களின் சிறைக்காவலை வரும் 15ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments