சென்னையில் 46 சென்டி மீட்டர் மழை பதிவு... இயல்பை விட 5 மடங்கு அதிகம் - வானிலை ஆய்வு மையம்!

0 2390

சென்னையில் கடந்த 6 நாட்களில் மட்டும் 46 செண்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது எனவும், இது இயல்பை விட 5 மடங்கு அதிகம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் இடைவிடாமல் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த நிலையில், கடந்த 7-ந் தேதியில் இருந்து இன்று வரையிலான 6 நாட்களில் மட்டும் சென்னையில் 46 சென்டி மீட்டர் மழை அளவு பதிவாகியிருக்கிறது.

இயல்பாக இந்த காலகட்டத்தில் 8 சென்டி மீட்டர் மழை மட்டுமே பதிவாகும் என்ற நிலையில், தற்போது 5 மடங்கு அதிகமாக 46 செண்டி மீட்டர் பதிவாகியுள்ளது. 7-ந் தேதி மயிலாப்பூரில் 23 செ.மீ. மழையும், நுங்கம்பாக்கத்தில் 21 செ.மீ.மழையும் பெய்துள்ளது. 11-ந் தேதி மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், பெரம்பூரில் தலா 16 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments