வெள்ளத்தில் தத்தளிக்கும் அம்பத்தூர் தொழிற்பேட்டை.. தொழில்நிறுவனங்களை சூழ்ந்துள்ள மழைநீரால் இரண்டு நாட்களாக மின்சாரம் துண்டிப்பு...

0 2364

சென்னையை அடுத்துள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டை சூழ்ந்துள்ள மழைநீரால் தொழிற்சாலைகளின் உற்பத்தி பணி முடங்கியுள்ளது.

கடந்த ஒருவார காலமாக பெய்த கனமழையினால் அம்பத்தூர் சிட்கோ நகர் முழுவதையும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால், தொழிலாளர்களின் பாதுகாப்பு கருதி கடந்த இரண்டு நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக சுமார் 500 நிறுவனங்களின் உற்பத்தி பணி முற்றிலும் முடங்கி பலகோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தொழில்நிறுவனத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர். தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் சென்னை மண்டல மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வரும்நிலையில், மேலும் அப்பணியை துரிதப்படுத்த தொழில்நிறுவனத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments