தமிழ்நாட்டின் 19 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யக் கூடும் - வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்

0 8466

தமிழ்நாட்டின் 19 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார்.

வானிலை ஆய்வு மையம் தகவல்

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலவுகிறது

ஆந்திரக் கடலோரம் முதல் குமரிக் கடல் வரை வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவுகிறது

இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிகக் கன மழை வரை பெய்யக் கூடும்

இன்று கனமழைக்கு வாய்ப்பு: வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை மாவட்டங்கள்

இன்று கனமழைக்கு வாய்ப்பு: திண்டுக்கல், தேனி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்டங்கள்

நாளை கனமழைக்கு வாய்ப்பு: வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை மாவட்டங்கள்

நாளை கனமழை: திண்டுக்கல், தேனி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, மதுரை, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள்

நவம்பர் 14 கனமழை: திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்கள்

நவம்பர் 15 கனமழை: வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், தருமபுரி, நீலகிரி, ஈரோடு, தேனி மாவட்டங்கள்

நவம்பர் 14: நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக் கூடும்

சென்னையில் அடுத்த இரு நாட்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments