சேலத்தில் தொடர் கனமழையால் ஓட்டு வீடு சரிந்து விழுந்து விபத்து - 5 வயது சிறுவன் இடிபாடுகளில் சிக்கி பரிதாப பலி!

0 2934

சேலம் அருகே கனமழையில் ஓட்டு வீடு இடிந்து விழுந்து 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொன்னம்மாப்பேட்டை அல்லிக்குட்டை பகுதியில் வசித்து வருபவர் ராமசாமி. மனைவி, மகன், தந்தை, சகோதரி, சகோதரியின் குழந்தைகள் என கூட்டுக்குடும்பமாக வசித்து வந்துள்ளனர். இவர்களது வீடு மண்ணால் கட்டப்பட்ட, ஓடு வேய்ந்த பழமையான வீடு என்று கூறப்படுகிறது.

கடந்த சில தினங்களாகப் பெய்து வந்த மழையில் வீட்டின் சுவர்கள் பலவீனமடைந்திருந்த நிலையில், இன்று காலை 8 மணி அளவில் திடீரென வீடு இடிந்து விழுந்துள்ளது. இதில் பெரியவர்கள் அனைவரும் காயங்களின்றி தப்பிய நிலையில், 5 வயதான ராமசாமியின் மகன் பாலசபரி இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

தகவலறிந்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் சம்பவ இடத்தை நேரில் வந்து பார்வையிட்டு, சிறுவனின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments