தண்டவாளத்தில் விழுந்த கற்களால் தடம் புரண்டு ரயில் விபத்து

0 3145
தண்டவாளத்தில் விழுந்த கற்களால் தடம் புரண்டு ரயில் விபத்து

கேரள மாநிலம் கொன்னூரில் இருந்து பெங்களூரு சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் தருமபுரி அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

சுமார் 1,500 பயணிகளை ஏற்றிக் கொண்டு பெங்களூரு யஷ்வந்த்பூர் நோக்கி சென்ற ரயில், அதிகாலையில் தருமபுரி அருகே வே.முத்தம்பட்டி மலைப் பாதையில் வந்த போது பாறைக் கற்கள் பெயர்ந்து என்ஜின் சக்கரத்தில் சிக்கியதால் தண்டவாளத்தில் இருந்து ரயில் லேசாக தடம் புரண்டது.

இதில் என்ஜினை ஒட்டியுள்ள 2 பெட்டிகளும் தடம் புரண்டன. விபத்து நிகழ்ந்த பகுதி வனப்பகுதி என்பதோடு, சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரை மலைக்கு நடுவே தண்டவாளம் அமைந்திருக்கிறது.ஆகையால், ரயில் குறைந்த வேகத்தில் வந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு, பயணிகள் அனைவரும் காயமின்றி மீட்கப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து, தடம் புரண்ட 2 பெட்டிகளில் இருந்த பயணிகள் பேருந்து மூலம் தருமபுரி ரயில் நிலையம் அனுப்பி வைக்கப்பட்டனர். மற்ற பெட்டிகள் சேலம் மார்க்கத்தில் இருந்து வேறொரு இஞ்சின் வரவழைக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments