காயமடைந்த நபரை தோளில் சுமந்து சென்ற பெண் காவல் ஆய்வாளர் ; நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர்

0 2775
காயமடைந்த நபரை தோளில் சுமந்து சென்ற பெண் காவல் ஆய்வாளர்

சென்னை கீழ்ப்பாக்கத்தில் மரம் முறிந்து விழுந்த விபத்தில் சிக்கிய நபரை தோளில் சுமந்து சென்று விரைந்து மருத்துவ உதவி கிடைக்கச் செய்த காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார்.

சென்னையில் நேற்று பெய்த தொடர் கனமழையால், ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து விபத்து நிகழ்ந்த நிலையில், கீழ்ப்பாக்கத்தில் முறிந்து விழுந்த மரத்தின் கீழே சிக்கி சுயநினைவின்றி கிடந்தவரை டி.பி.சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஷ்வரி தோளில் சுமந்து சென்று ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments