லாரி ஓட்டுனரிடம் கத்தி முனையில் வழிப்பறி செய்த 2 பேருக்கு பொதுமக்கள் தர்ம அடி

0 2267
லாரி ஓட்டுனரிடம் கத்தி முனையில் வழிப்பறி செய்த 2 பேருக்கு பொதுமக்கள் தர்ம அடி

நாமக்கல் அருகே லாரி ஓட்டுனரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2பேரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

பரமத்திவேலூரை சேர்ந்த பிரகாஷ் என்பவர் தனது லாரியில் அங்கன்வாடி மையங்களுக்கு சத்துமாவு லோடை ஏற்றிக்கொண்டு சேலம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பொம்மைகுட்டைமேடு என்னும் இடத்தில் லாரியில் இருந்த பிரகாஷை 4 பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் 30 ஆயிரம் ரூபாயை பறித்தது.

மேலும் லாரியையும் அந்த கும்பல் ஓட்டிச்சென்ற போது முதலைப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் அதனை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments