20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலிய அணி தகுதி

0 3639
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலிய அணி தகுதி

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலிய அணி தகுதி பெற்றுள்ளது. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. முகமது ரிஸ்வான் 67 ரன்னும், பக்கர் சமான்  55 ரன்களும் சேர்த்தனர்.

இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணியில் 19வது ஓவரில் மேத்யூ வேட் அடுத்தடுத்து 3 சிக்சர்கள் பறக்கவிட்டு அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

5 விக்கெட் இழப்புக்கு ஆஸ்திரேலியா 177 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments