தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு ; இந்திய வானிலை ஆய்வு மையம்

0 4620
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே கரையை கடந்ததாக அறிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழகம், புதுச்சேரி பகுதியில் இன்றும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனத் தெரிவித்துள்ளது.

நேற்று சென்னைக்கு அருகே மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை பெருநகர் மற்றும் மற்றும் பிற மாவட்டங்களிலும் கனமழை நீடுக்கும் என்றும், 12 மணி நேரத்திற்கு கடல் கொந்தளிப்புடன் இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments