கனமழை பெருவெள்ளத்தால் மின் தடைப்பட்ட இடங்களில் இன்று மாலைக்குள் மின்சாரம் வினியோகிக்கப்படும் ; அமைச்சர் செந்தில்பாலாஜி

0 1994
கனமழை பெருவெள்ளத்தால் மின் தடைப்பட்ட இடங்களில் இன்று மாலைக்குள் மின்சாரம் வினியோகிக்கப்படும்

கனமழை பெருவெள்ளதால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் இன்று மாலைக்குள் மின் வினியோகிக்கப்படுமென மின் சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

சென்னை அண்ணா சாலை தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் நடந்த அனைத்து பொறியாளர்களுடனான அலோசனை கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, சென்னையில் 4 ஆயிரம் மின் வாரிய ஊழியர்களும், ஒட்டுமொத்த தமிழகத்தில் 36 ஆயிரம் ஊழியர்களும் இரவு முழுவதும் மின் இணைப்புகளை சீர் செய்யும் பணியில் ஈடுபடுவதாக தெரிவித்தார்.

மின்சார மின்னூட்டங்கள் மற்றும் பில்லர் பாக்ஸ் போன்ற இடங்களில் நீர் தேங்கி இருப்பதால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு கருதி பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். முன்னதாக வட சென்னை அனல் மின் நிலையத்தின் அளகு ஒன்றில் மழை நீர் தேங்கி 400 மெகாவாட் மின் உற்பத்தி தடை பட்டது குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு செய்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments