மகாராஷ்டிராவில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் பல்வேறு பரிசுகள் வழங்க திட்டம்

0 1865
மகாராஷ்டிராவில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் பல்வேறு பரிசுகள் வழங்க திட்டம்

மகாராஷ்டிராவில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் பல்வேறு பரிசுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள சந்திராபூர் நகராட்சியில் இந்தத் திட்டத்தை அமல்படுத்த நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி இன்று முதல் வரும் 24ம் தேதி வரை தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களில் சிலரைக் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து எல்இடி டிவி, ரெஃப்ரிஜிரேட்டர், வாஷிங் மெஷின், மிக்ஸி போன்றவை வழங்கப்படும் என நகராட்சி மேயர் ராக்கி சஞ்சய் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் மக்களிடம் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments