சாலையில் நடந்து சென்ற போது மின்சாரம் தாக்கி 11 வயது சிறுமி உயிரிழப்பு

0 1952
சாலையில் நடந்து சென்ற போது மின்சாரம் தாக்கி 11 வயது சிறுமி உயிரிழப்பு

சென்னை திருவொற்றியூரில் மின்சாரம் பாய்ந்து 11வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருவொற்றியூர் கலைஞர் நகர் மெயின் தெருவில் வசித்து வரும் சிட்டிபாபு பலத்த மழை காரணமாக நேற்று மாலை தனது 2 மகள்களை சகோதரி வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.

சிறுமிகள் இருவரும் கொட்டும் மழையில் புறப்பட்டு சென்ற போது சாலையில் உள்ள மின்கம்பத்தில் இருந்து மின்சாரம் தண்ணீரில் திடீரென பாய்ந்ததால் 11வயது சிறுமி கமலி தூக்கி வீசப்பட்டார்.

இதில் மயக்கமான அந்த சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments