மழை வெள்ளம் பற்றி சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை ; தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு

0 4252
மழை வெள்ளம் பற்றி சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை

மழை வெள்ளம் குறித்து சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புவோரின் கணக்குகள் முடக்கப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளசேத வீடியோக்களை தற்போது நிகழ்ந்தது போல் பின்னணி குரல் பதிவுடன் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு பொது மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்துவதாக போலீசாரின் கவனத்திற்கு வந்துள்ளதாகவும், அரசு நிர்வாகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பொய் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments