மூழ்கும் நெற்பயிர்கள் விவசாயிகள் வேதனை.!

0 1997

தொடர் கனமழையால், டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

திருவாரூர் மாவட்டத்தில் இடைவிடாது பெய்த கனமழையால், விளைநிலங்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. சுமார் 45ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதனிடையே, விளைநிலங்களில் தேங்கிய மழைநீர் மெல்ல மெல்ல வடிய துவங்கியுள்ளது.

மயிலாடுதுறையில் பல்வேறு இடங்களில் வடிகால் வாய்க்கால்களில் உடைப்பு ஏற்பட்டு, விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. வில்லியநல்லூர் உச்சிதமங்கலம், பாலாக்குடி, அருவாப்பாடி, கொற்றவநல்லூர், கீழமருதாநல்லூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கனமழை காரணமாக தரங்கம்பாடி தாலுகாக்கு உட்பட்ட பெரம்பூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன.

நாகை மாவட்டம் புதுப்பள்ளி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், விளை நிலத்திற்குள்ளும் தண்ணீர் புகுந்து நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. விளைநிலங்கள் கடல் போல் காட்சியளிப்பதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

விழுப்புரம் அடுத்த வேடம்பட்டில் பம்பை வாய்க்காலில் இருந்து விளைநிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளதால், விளைநிலங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இடுப்பளவு தண்ணீரில் தேங்கி நிற்கும் தண்ணீரால் நெற்பயிர்கள் அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் களிமேடு, சக்கர சாமநதம், சீராளூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்கள் நீரில் மூழ்கின.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments