மழையால் உயிரிழந்தவர்களுக்கான ரூ.4 லட்சம் நிவாரணம் 10 நாட்களுக்குள் வழங்கப்படும் - அமைச்சர்

0 3321

மழையால் உயிரிழந்தவர்களுக்கான 4 லட்ச ரூபாய் நிவாரணம், 10 நாட்களுக்குள் அவர்களது குடும்பங்களுக்கு வழங்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மழை பெய்வது நின்றுவிட்டால், நாளைக்குள் தண்ணீர் வெளியேற்றப்படும் என குறிப்பிட்டார். மேலும், சென்னை மாநகராட்சிப் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 249 பேர், 44 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments