பரிதாபமாக கிடந்த நபரை மீட்டு தோலில் சுமந்து ஆட்டோவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பெண் காவல் ஆய்வாளர்!

0 2721

சாலையோரத்தில் மயங்கிக் கிடந்த இளைஞர் ஒருவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த டி.பி. சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பாராட்டு தெரிவித்தார்.

கனமழை காலகட்டத்தில் காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு உதவி வரும் ஆய்வாளர் ராஜேஸ்வரி, இன்று காலை சாலையோரத்தில் இளைஞர் ஒருவர் விழுந்து கிடந்ததை பார்த்ததும் மின்னல் வேகத்தில் செயல்பட்டார்.

யாரையும் எதிர்பார்க்காத ராஜேஸ்வரி அந்த இளைஞரை தன் தோளில் தூக்கிப் போட்டார். பின்னர், அங்கிருந்த ஆட்டோவில் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

மருத்துவமனைக்கு சென்று அவரது உடல் நலம் பற்றி விசாரித்த தாகவும், கவலைப்பட ஒன்றுமில்லை எனவும் பின்னர் செய்தியாளர்களிடம் ஆய்வாளர் ராஜேஸ்வரி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments