ஊரப்பாக்கத்தில் மழை நீரால் சூழ்ந்துள்ள டாஸ்மாக் மதுபான கடை, வெள்ளத்தை பொருட்படுத்தாமல் மது குடிப்பதில் குடிமகன்கள் ஆர்வம்

0 3142

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஊரப்பாக்கத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை சுற்றி மழை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், இடுப்பளவு நீரை கடந்து சென்று குடிமகன்கள் மது வாங்கி சென்றனர்.

டாஸ்மாக் கடையை சுற்றி மழை நீர் தேங்கியுள்ள நிலையில், சிறிது அளவு கூட ஆபத்தை உணராத மது குடிப்பவர்கள் நீரை கடந்து சென்று வாங்குவது மட்டுமில்லாமல், பாரில் குடித்துவிட்டு தள்ளாடியபடி வெளியே வருகின்றனர்.

கன மழை மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்து எந்த வித கவலையும் இன்றி மது வாங்கி குடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments