சென்னைக்கான ரெட் அலர்ட் வாபஸ்.!

0 4360


இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். சென்னை மற்றும் அருகாமை மாவட்டங்களுக்கான, அதி கனமழைக்கான ரெட் அலர்ட் மட்டும் விலக்கி கொள்ளப்படுவதாக அறிவித்துள்ளார். இருப்பினும், கனமழை முதல் மிக கனமழை வரையில் பெய்யக்கூடும் என்றும், பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கிறது.!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கத் தொடங்கியது

காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 16 கி.மீ வேகத்தில் நகர்ந்து கரையை கடந்து வருகிறது

இன்று காலை 8.30 மணியிலிருந்து தற்போது வரையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் 63 மி.மீ மழைப்பதிவு

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை முழுவதுமாக கடந்து செல்ல 2 மணி நேரம் எடுத்துக் கொள்ளும்

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழை வரையில் பெய்யக்கூடும்

சென்னை பெருநகரில் விட்டு,விட்டு, கனமழை முதல் மிக கனமழை வரையில் தொடரும்

சென்னைக்கான ரெட் அலர்ட் வாபஸ்.!

சென்னை மற்றும் அருகாமை மாவட்டங்களில் அதி கனமழைக்கான எச்சரிக்கை வாபஸ்

சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கான ரெட் அலர்ட் விலக்கப்படுகிறது

இருப்பினும், சென்னை மற்றும் அருகாமை மாவட்டங்களில் மிக கனமழை வரையில் பெய்யும்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments