சென்னைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை கரையை கடக்கும்

0 8169

காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை சென்னைக்கு அருகே கரையை கடக்க உள்ள நிலையில், தரைக்காற்று மணிக்கு 45 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் வீசக்கூடும் என்றும் பொதுமக்கள் வெளியே தேவையின்றி செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழ்நாடு - தெற்கு ஆந்திரா இடையிலான பகுதியில் சென்னைக்கு அருகில் இன்று மாலை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த தரை காற்று வீசக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments