பள்ளி மாணவனை தாக்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்

0 7343

மதுரை செக்காணூரணியில் வீட்டுப் பாடம் எழுதாமல் வந்த மாணவனை தாக்கியதாக ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், மாணவனை தாக்கும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

கள்ளர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவன் வீட்டு பாடம் எழுதாமல் வந்ததாகவும், அதுகுறித்து கேட்ட ஆசிரியரை கேலி செய்ததாகவும் கூறப்படுகிறது. மாணவனை ஆசிரியர் தாக்கும் வீடியோ சக மாணவர்களால் எடுக்கப்பட்ட நிலையில் வீடியோ இணையதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

ஆசிரியர் திரிலோக சுந்தரத்தை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் ராகவன் உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments