கொரோனாவுக்கு எதிரான மாத்திரைக்கு விரைவில் அவசர கால சிகிச்சைக்கான அனுமதி

0 4563

உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா நோயின் கடுமையைக் குறைக்கும் மாத்திரைகளுக்கு அவசர கால சிகிச்சைக்கான அனுமதி வழங்கப்பட உள்ளது.

Molnupiravir என்ற மாத்திரைகள் இன்னும் சில நாட்களில் புழக்கத்திற்கு வர இருப்பதாக அதிகாரிகள் தெரவித்துள்ளனர். கொரோனா தீவிரமாக பாதித்த 18 வயது மேற்பட்டோருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கும் இந்த மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன. தடுப்பூசியைக் காட்டிலும் இந்த மாத்திரைகள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

கொரோனா வைரசின் சவப்பெட்டிக்கு அறையப்படும் கடைசி ஆணி இது என்றும் வர்ணிக்கப்படுகிறது.ஆரம்பத்தில் இந்த மாத்திரைகள் 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கலாம் என்றும் உற்பத்தி அதிகரிக்கும் போது 500 அல்லது 600 ரூபாய்க்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments