விபத்தில் சிக்க இருந்த, தன்னைக் காப்பாற்றியவருக்கு கை நீட்டி நன்றி கூறிய ஸ்லாத்

0 4619

பிரேசில் நாட்டில் சாலையில் சுற்றித் திரிந்த தன்னைக் காப்பாற்றியவருக்கு ஸ்லாத் விலங்கு கை நீட்டி நன்றி கூறியது பார்ப்பவர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகின் சோம்பேறியான விலங்கு எனக் கூறப்பட்டாலும், குழந்தை போல குணமும், அரிய வகையைச் சேர்ந்த உயிரினமுமான ஸ்லாத் பிரேசிலில் காணப்படுகிறது. இந்நிலையில் கெய்ராஸ் என்ற இடத்தில் ஸ்லாத் ஒன்று மிகவும் மெதுவாக சாலையைக் கடக்க முயன்றது.

இதனைக் கண்ட வாகன ஓட்டி ஒருவர் அதனைத் தூக்கி அருகில் இருந்த மரத்தில் விடுவித்தார்.

மரத்தில் ஏறத் தொடங்கிய ஸ்லாத் மெதுவாகத் திரும்பி தன்னைக் காப்பாற்றியவரை நோக்கி கையை நீட்ட, பதிலுக்கு அவரும் அதனைத் தொட்டு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments