இலங்கையில் பல்வேறு பகுதிகளில் தொடரும் பலத்த மழை... நிலச்சரிவுகளில் சிக்கி 22 பேர் உயிரிழப்பு.!

0 2675

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ள நிலையில் இலங்கையில் பலத்த மழை பெய்து வருகிறது.

மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 22 பேர் உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பதுளை, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு தொடர்ந்து பலத்த மழை மற்றும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments