பணமோசடி வழக்கில் வங்கதேசத்தின் முன்னாள் தலைமை நீதிபதிக்கு 11 ஆண்டு சிறை தண்டனை

0 2223

வங்கதேசத்தின் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிக்கு 11 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவர் சுரேந்திர குமார் சின்ஹா, இவர் அன்றைய காலகட்டத்தில் நாடாளுமன்றத்தால் நீதிபதிகளை பதவி நீக்கம் செய்யமுடியாது என்று கூறி அரசை அதிரவைத்தவர்.

இதனால் அந்த ஆண்டிலேயே வங்கதேசத்தில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் தஞ்சமடைந்தார். இந்நிலையில் தனியார் வங்கி அதிகாரிகளுடன் சேர்ந்து 4 லட்சத்து 71 ஆயிரம் டாலர் மோசடி செய்ததாக சின்ஹா மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதனை விசாரித்த டாக்கா நீதிமன்றம் சின்ஹாவுக்கு 11 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments