ஆப்கான் மண்ணை தீவிரவாதத்திற்குப் பயன்படுத்தக்கூடாது இந்தியா உள்ளிட்ட 8 நாடுகள் கூட்டாக பிரகடனம்

0 3073

ஆப்கானிஸ்தான் மண்ணை தீவிரவாதத்திற்குப் பயன்படுத்தக் கூடாது உள்ளிட்ட முக்கியத் தீர்மானங்கள் இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் சந்திப்பில் நிறைவேற்றப்பட்டன.

ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து இந்தியா, ரஷியா, ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மேனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் கலந்து கொண்ட பாதுகாப்பு பேச்சுவார்த்தை, டெல்லியில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சீனாவும் பாகிஸ்தானும் கலந்து கொள்ளவில்லை. கூட்டத்தின் முடிவில் 8 நாடுகள் சேர்ந்து கூட்டு பிரகடனம் வெளியிட்டன.
ஆப்கானிஸ்தான் உள் விவகாரங்களில் பிற நாடுகளின் தலையீடு கூடாது என்பதை 8 நாடுகளும் ஆதரிப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments