தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க செயலர் வீட்டில் ரெய்டு... ரூ.40 லட்சம் மதிப்பிலான ஆவணங்கள் பறிமுதல் என தகவல்

0 10565

தென்காசி மாவட்டம் ஊத்துமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலர் வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் 40 லட்ச ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் சிக்கி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கூட்டுறவு சங்கத்தில் 6 கோடி ரூபாய் பணத்தை கையாடல் செய்ததாக எழுந்த புகாரில் செயலர் அய்யனார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு நடந்து வருகிறது.

அவர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் கணக்கில் வராத 40 லட்ச ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments