சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களுக்கும் மீட்பு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள 15 பொறியாளர்கள் நியமனம்

0 3210

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பருவமழை மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தலைமைப் பொறியாளர் மற்றும் மேற்பார்வை பொறியாளர்கள் நிலையில் 15 பொறியாளர்கள் பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ள நிலையில், வியாழக்கிழமை மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில், கனமழை முதல் அதி கனமழை வரையில் பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு.வி.க. நகர், அம்பத்தூர் உட்பட 15 மண்டலங்களிலும் பருவமழை மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள பொறுப்பு அலுவலர்களை மாநகராட்சி நிர்வாகம் நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments