வீட்டை சூழ்ந்த வெள்ளம்.. 2 கால்களிலும் அறுவை சிகிச்சை செய்து வெளியே வர முடியாமல் தவித்த மூதாட்டி..! தக்க சமயத்தில் உதவிய மீட்பு குழுவினர்

0 4147

சென்னையில் மழை நீர் சூழ்ந்த வீட்டில், இரண்டு கால்களிலும் அறுவை சிகிச்சை செய்து நடக்க முடியாமல் தவித்த பெண் பத்திரமாக மீடக்கப்பட்டு உறவினர் வீட்டில்  சேர்க்கப்பட்டார்.

மாதவரம் தணிகாச்சலம் தெருவில் மழை நீர் சூழ்ந்துள்ள நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த 62 வயது மூதாட்டி யமுனாதேவி நடக்க முடியாமல் உதவ யாருமின்றி வீட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில்,  தீயணைப்பு மற்றும் காவல்துறையின் பேரிடர் மீட்பு குழுவினர், அவரை வீட்டிலிருந்து தூக்கி வந்து காவல்துறை வாகனத்தில் அழைத்துச் சென்று பெரம்பூர் பகுதியில் வசிக்கும் அவருடைய உறவினர் வீட்டில் பத்திரமாக ஒப்படைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments