மழை காரணமாக சென்னை மாநகரின் சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்

0 4930
தொடர் மழை காரணமாக சென்னை மாநகரின் சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக சென்னை மாநகரின் சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மாதவரம் எம்.ஆர்.எச் சாலையில் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருப்பதால் சாலை ஒரு பக்கமாக மூடப்பட்டுள்ளது. இதனால் உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் அனைத்து வாகனங்களும் சாலையின் ஒரே பக்கத்தின் வழியாக செல்கின்றன.

தியாகராய நகர் திருமலைபிள்ளை ரோடு, காமராஜர் இல்லம் முன்பு பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வள்ளுவர்கோட்டம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. வள்ளுவர்கோட்டத்தில் இருந்து வாணிமஹால் செல்லும் வாகனங்கள் திருமலைபிள்ளை ரோட்டில் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் அஷ்டபுஜம் ரோடு சந்திப்பில் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் பேருந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் டவுட்டன் சந்திப்பிலிருந்து புளியந்தோப்பு நோக்கிச் செல்லும் மாநகர பேருந்துகள் பிரிக்கிளின் ரோடு, ஸ்ட்ரகன்ஸ் ரோடு வழியாகச் செல்ல வேண்டும்.

பழைய வேளச்சேரி ரோட்டில் மரம் விழுந்துள்ளதால் கிண்டி கான்கார்டு சந்திப்பில் இருந்து ஹால்டா மற்றும் சின்னமலை நோக்கி போக்குவரத்து திருப்பிவிடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments