தீவிரவாதிகளின் புகலிடமாக ஆப்கன் மாறி விடக்கூடாது ; இந்தியா தலைமையில் நடந்த பிராந்திய பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம்

0 2557
தீவிரவாதிகளின் புகலிடமாக ஆப்கன் மாறி விடக்கூடாது

தீவிரவாதிகளின் பயிற்சிக் கூடமாகவோ அல்லது புகலிடமாகவோ ஆப்கானிஸ்தான் பயன்படுத்தப்படக் கூடாது என இந்தியா தலைமையில் டெல்லியில் நடந்த பிராந்திய பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தியா, ரஷ்யா, ஈரான், கஸாக்ஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய 8 நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில், ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் பிடித்த பிறகு ஏற்பட்ட சர்வதேச தாக்கங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

தீவிரவாத அச்சுறுத்தல், மத தீவிரவாதம், போதை மருந்து கடத்தல் உள்ளிட்டவை அதனால் பெருகுமா என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மத்திய கிழக்கில், ஆப்கானிஸ்தானை சுற்றி உள்ள அண்டை நாடுகள் முதன் முறையாக இந்தியாவின் தலைமையில் சந்தித்து ஆப்கன் குறித்த முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments