போலந்து நாட்டில் குடியேறும் நோக்கத்துடன் காயங்களுடன் எல்லையில் காத்திருக்கும் அகதிகளின் வீடியோ வெளியீடு

0 3191
காயங்களுடன் எல்லையில் காத்திருக்கும் அகதிகளின் வீடியோ வெளியீடு

போலந்து நாட்டில் குடியேறும் நோக்கத்துடன் பெலாரஸிலிருந்து வந்த அகதிகள் பலர், போலந்து எல்லையில் காயங்களுடன் காத்திருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

பெலாரஸ்- போலந்து எல்லையில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் கடுங்குளிரில் அகதிகள் காத்துக்கிடக்கின்றனர். போலந்துக்குள் நுழைய முற்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகளை போலந்து படையினர் தடுத்து நிறுத்தி வரும் நிலையில், இதனால் ஏற்பட்ட மோதலில் அகதிகள் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மத்திய கிழக்கு, ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஆப்பிரிக்காவை சேர்ந்த அகதிகள் போலந்து வழியாக ஐரோப்பிய யூனியனுக்குள் நுழைய பெலாரஸ் உதவி செய்வதாக ஐரோப்பிய யூனியன் நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments